"தேர்தல் நெருங்கும் போது, திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்புள்ளது.." - ஜெயக்குமார்
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றதால் அரசியலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாதென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த புழல் பகுதியில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்பட லாம் என்றும், தேர்தல் நெருங்கும்போது தி.மு.க கூட்டணியிலிருக்கும் பல கட்சிகள் வெளியேறி, அ.தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
Comments